தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பது ஏன்?- ராதாகிருஷ்ணன்

by Admin / 11-08-2021 02:33:34pm
தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பது ஏன்?- ராதாகிருஷ்ணன்

 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் கூடிய கூட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

 
தமிழக அரசு கொரோனா தொற்று அதிகரிக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் சில மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் கூடிய கூட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

கொரோனா தடுப்பூசி

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரு தெருவாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படுகிறது. என்றாலும் சிலர் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும்.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

 

Tags :

Share via