சிக்கனம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது......

by Admin / 19-08-2021 01:59:25pm
சிக்கனம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது......

              யாரும் எதிர்பாராத ஒரு சூழல் உலகம் முழுவதற்கும் ஏற்பட்டுவிட்டது... 
  கொரோனா....மனிதர்களின் வாழ்க்கையை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டது.....
  அப்படி செய்துவிடலாம் இப்படி செய்து விடலாம் என்று போட்ட கணக்குகள் எல்லாம் தப்புக் கணக்காகிவிட்டது.....


  பணத்தின் தேவையும் அதனின் மதிப்பையும் காலம் உணர்த்தி விட்டது. தேவையற்ற செலவுகள் செய்தவர்கள் இப்பொழுது இது     அவசியமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.... தொடர்ச்சியாகக் சம்பாதித்துக் கொண்டு சேமிப்பை பெருக்கியவர்கள்.... இன்று     வருமானமின்றி தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்..


 அலுவலக வேலை.... வீட்டுக்குள் செய்யும் வேலையாக மாறிவிட்டது. மனித உறவுகளின் மதிப்பை விட பணம் தான் பிரதானம்  என்னும் எண்ணத்தை அழுத்தமாக மக்கள் பாடமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்..

சகஜமான பணப் பணப்புழக்கமில்லை... அத்தியாவசிய தேவையின்றி பணம் செலவழிப்பது என்பது யோசிக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது... முன்னூறு ரூபாய்க்கு இப்ப இது தேவையா...? எதற்கு ஆயிரத்தில் சட்டை பேண்ட்... பள்ளி, கல்லூரித் திறக்க வில்லை ஊர்களுக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குக் செல்ல வில்லை பின் எதற்கு இவ்வளவு காசு கொடுத்து உடை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி... பல்வேறு வழிகளில் எழும்ப ஆரம்பித்து விட்டன....


உணவு, மளிகை, மருத்துவம் சார்ந்த செலவுகள் மட்டுமே தங்குதடையின்றி நடந்து கொண்டிருக்கின்றன... 
சம்பாதிப்பது என்பது பெரியதாகி போய்விட்டதால், செலவு என்பது யோசனைக்குறியதாகிவிட்டது.... பணத்தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்பட்டு விட்டன....

மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.... நகர் புற  ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தவர்கள்.... இப்பொழுது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்..


அரசு வேலை, மென்பொருள் நிறுவன வேலையில் இருப்போர் பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள்.... மற்றவர்களின் வாழ்வியல் சூழல் தடுமாற்றத்துடனே நகர்ந்து கொண்டிருக்கிறது.... இந்நிலை தொடருமா...? முடிவுக்கு வருமா என்று சொல்ல முடியவில்லை.... பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தி வருகின்றன.... மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக வளைந்து கொண்டிருக்கிறது...

எதையும் திட்டமிட்டுச் செயல்பட முடியவில்லை... 
வருமானம் வந்த பொழுது திட்டமிட்ட செலவுகளைச் செய்தவர்கள்..... திட்டமிடாமலே செலவு சூழலில் சிக்கித்திணறக் கொண்டிருக்கிறார்கள்.. 


பண்டிகை, விழாக்கள் ஆடம்பரச் செலவுகளைச் செய்ய வைத்து மகிழ்ச்சியைத் தந்தது போய்... பண்டிகை, திருமண திருவிழாக்கள் இன்றி காலங்கள் அச்சத்திலே கழிந்து கொண்டிருக்கின்றன. 
யார் உயிரோடிருப்பார்கள் என்கிற உத்திரவாதமில்லை... 
போன வாரம் பார்த்தேனே.

கொரோனாவில் இறந்துவிட்டாரா என்று அதிரும் நிகழ்வுகளே அதிகமாகியிருக்கின்றன.... 
வசதிபடைத்தவன், ஏழை படித்தவன், படிக்காதவன் என்கிற பேதமின்றி கொரோனா.... மனித உயிர்களைக் கொத்திப் போய்கொண்டிருக்கிறது....


வருமானம் என்பது ஜுவாதாரம்.... செலவு தேவையைப் பூர்த்தி செய்வது..
வருமானமின்றி.... தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் சிக்கனம் என்கிற வரட்டுத் தனமான ஒரு சூழலில் மாட்டியி ருக்கிறார்கள் மக்கள்.....

அன்றாட செலவுகளே ஆடம்பரச் செலவுகள் போன்று அச்சுறுத்துவதாகப் பலர் கருதுகின்றனர்... இந்நிலையில் எப்படிச் சிக்கனம் என்கிற கேள்வி எழுகிறது....    தேவையற்ற செலவுகள் குறைந்துவிட்டன... ஆடம்பரச் செலவுகள் அறவே ஒழிந்து விட்டன... 
திருமணம், விழாக்கள் பெரிய அளவில் இல்லை.... திரையரங்கு, கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன.... 
ஹோட்டலுக்குக் குடும்பத்துடன் சென்று உணவருந்தும் நிலை மாறி விட்டது.

அவசியமின்றி கார், ஆட்டோக்கள் பயன்படுத்த முயல்வதில்லை... 
பெண்கள் இலவச பேருந்தை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்... 
புகைவண்டியில் செல்லாதோர் கூட செலவு கருதி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். 
அமெரிக்காவிலிருந்து பெண்ணைப் பார்க்கச் சென்றோம்....

ஆஸ்திரேலியாவிலிருக்கும் அக்காவைப் பார்க்கச் சென்றோம் என்கிற கதை இல்லை.....எல்லோரும் வீடியோ காலில் பேசிக் கொள்கிறார்கள். 
             பணம்.... பணம்... 
நேற்றைய சேமிப்பு... இன்று செலவாகிக் கொண்டிருக்கிறது.... 
இன்றைக்கான வரவு கேள்விக்குறியாக நீண்டு கொண்டிருக்கிறது....

 

Tags :

Share via