தலீபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்.!!

by Admin / 21-08-2021 02:40:34pm
தலீபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்.!!

தலீபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையில், தலீபான் பயங்கரவாதிகள் தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை தங்களுக்கான பிரத்யோக இணையதளம் மூலம் உலக நாடுகளுக்கு தெரிவித்து வந்தனர். ஆங்கிலம், உருது, அரபு, பஷ்டோ, டரி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த இணையதள பக்கம் உள்ளது.
 
இந்நிலையில், தலீபான் பயங்கரவாதிகளின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு மொழிகளில் உள்ள தலீபான்களின் இணையதள பக்கங்கள் திடீரென மாயமாகியுள்ளது.  

முன்னதாக, தலீபான்கள் தொடர்பான பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது தலீபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via