சென்னை – திருத்தணி வழித்தடத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு

by Editor / 22-08-2021 06:04:19pm
சென்னை – திருத்தணி வழித்தடத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு

சென்னை- அரக்கோணம் வழித் தடத்தில் ஞாயிற்று கிழமைகளில் மின்சார ரெயில்களின் சேவை 185 ஆக அதிகரிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப, மின்சார ரெயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்று கிழமைகளில் மின்சார ரெயில் சேவை அதிகரித்து இயக்கப்படவுள்ளன. இந்த நடைமுறை இன்று (ஞாயிறு) முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, சென்னை கடற்கரை- ஆவடி 2, ஆவடி- சென்னை கடற்கரை 2, சென்னை கடற்கரை- திருவள்ளூர் 6, திருவள்ளூர்- சென்னை கடற்கரை 6, சென்னை சென்ட்ரல்- திருத்தணி 2, திருத்தணி- சென்னை சென்ட்ரல் 2 என ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை- அரக்கோணம் தடத்தில் ஞாயிற்று கிழமைகளில் ஏற்கனவே 165 ஆக இருந்த ரெயில் சேவை தற்போது 185 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via