பொறியியல் மாணவர் சேர்க்கை : வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை

by Editor / 23-08-2021 09:39:16am
பொறியியல் மாணவர் சேர்க்கை : வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.கணிதம் ,இயற்பியல், ஆப்ஷனல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் முடியும் நிலையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல் பாடம் ,10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் ,பிறந்த தேதி ,ரேண்டம் எண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு ரத்து காரணமாக மாணவர்களின் கட் ஆப் உயர்வால் சிக்கலை தீர்க்க உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான புதிய வழிகாட்டுதல்களில் வேதியியல் பாட மதிப்பெண்களை கட்டாயமாக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via