ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் விலகல்- முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்

by Admin / 31-08-2021 04:53:32pm
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் விலகல்- முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்


   
வரலாற்றிலே ஜோ பைடன் நிர்வாகம் ஒரு போரை மோசமாக கையாண்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப தருமாறு கோரப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகலை அடுத்து அந்த நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது முன்னாள் அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தோற்றுவிட்டதாகவும், தலிபான்களிடம் சரணடைந்து விட்டதாகவும் தெரிவித்து வருகிறார். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்க படைகள் ஈடுபட்ட போது மீட்பு விமானத்தில் பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் கூறினார்.

இதற்கிடையே அமெரிக்க படைகள் இன்று ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறியது. இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

 ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விதம், ஜோ பைடன் நிர்வாகத்தின் போரில் இருந்து பின் வாங்கியது ஆகியவை மோசமாகவே பார்க்கப்படும். திறமையாக கையாளவில்லை.

வரலாற்றிலே ஜோ பைடன் நிர்வாகம் ஒரு போரை மோசமாக கையாண்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப தருமாறு கோரப்பட வேண்டும்.

அதை திரும்ப ஒப்படைக்காவிட்டால் நாம் ராணுவப் படையுடன் அங்கு சென்று அதனை திரும்பப் பெற வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அந்த ஆயுதங்களை வெடிக்க செய்து அழிக்க வேண்டும். இதுபோன்ற பலகீனமான திரும்பப் பெறுதல் போன்ற முட்டாள்தனமான செயலை யாரும் நினைத்தது கூட இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
 

 

Tags :

Share via