நியூசிலாந்தில் பயங்கரம் -ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் நடத்திய கொடூர தாக்குதல்:

by Editor / 03-09-2021 01:02:30pm
நியூசிலாந்தில் பயங்கரம் -ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் நடத்திய கொடூர தாக்குதல்:

நியூசிலாந்து நியூலின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர், அங்கிருந்த ஆறு பேரை சரமாரியாக குத்தினார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் அவர் இருந்துவந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "கடந்த 2011ஆம் ஆண்டு, இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்துக்கு வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.அவரை கண்காணித்துவந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில், ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளார். மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க, தவறான செயல் இன்று நடைபெற்றுள்ளது" என்றார். அந்த நபரின் நோக்கம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் ஊக்கம் பெற்ற இக்கொள்கை வன்முறையால் ஆனது" என பதில் அளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து, கண்காணிப்பு வளையத்திலிருந்து வரும் அந்த நபர் குறித்து கூடுதல் தகவல்களை பிகிர்ந்த கொள்ள ஜெசிந்தா மறுத்துவிட்டார். இந்த நபர் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நியூசிலாந்தில் வரலாறு காணாத பயங்கரவாத தாக்குதல் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. கிறிஸ்ட்சர்ச் மசூதியில் நடைபெற்ற அந்த தாக்குதலில் அப்பாவி இஸ்லாமியர்கள் 51 பேரை வெள்ளை நிற இனவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

 

Tags :

Share via