கள்ளச்சாராய குற்றங்களுக்காக சிறை சென்றவர்கள் மறுவாழ்வு நிதிக்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு

by Editor / 08-09-2021 09:57:23am
கள்ளச்சாராய குற்றங்களுக்காக சிறை சென்றவர்கள் மறுவாழ்வு நிதிக்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு

கள்ளச்சாராயம் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகி மனம் ஓர் இனம் பொருளாதார மறுவாழ்வுக்கு உதவுவதற்காக ரூ.5 கோடி மானியமாக வழங்கப்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வேறு தொழில்களை மேற்கொள்ள இந்த மானிய நிதி வழங்கப்படும் என்று மதுவிலக்கு மின்சாரம் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தொடர்பான மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை வெளியிடும் பொழுது இத்தகவல்களை அமைச்சர் வெளியிட்டார்.

மதுவிலக்கு பிரச்சாரம் முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மின் ஆளுமை நடவடிக்கைகளில் 74 சேவைகளை இணையம் வழி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இதற்காக தேவையான உள்கட்டமைப்பு மற்றும் கணினி மயமாக்குதல் இருக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேற்பார்வையாளர்கள் முதல் விற்பனையாளர் சில்லறை விற்பனை பணியாளர்கள் வரை தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் பெறுபவர்களுக்கு மாதம் ரூபாய் 500 கூடுதலாக உயர்த்தி ஊழியம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

டான்ஜெட்கோ நிறுவனத்தில் நிதி இழப்புக்கள் அதனை லாபகரமாக இயக்குவது சாத்தியம் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

டான்ஜெட்கோ மற்றும் டான்டிரான்ஸ்கோ ஆகியவற்றை லாபம் தரும் வகையில் திருத்தி அமைப்பதற்கும் அதன் நிர்வாக அமைப்பை மாற்றுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் சென்னை, கன்னியாகுமரி தொழில் தாழ்வார மின்சாரத்துறை முதலீட்டு திட்ட நிதியங்கள் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவுகளை அரசு துரிதமாக அமல் செய்து அந்த இரண்டு நிறுவனங்களும் கவிழ்ந்து விடாமல் காக்க நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை கொள்கை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோரின் நலன் காக்க மாநில அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விண்ணகம் என்ற புதிய மாநில அளவிலான மத்திய பிற்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் நல மையம் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via