சினிமா டிக்கெட் முன்பதிவிற்கு. இனி ஒரே இணையதளம்

by Editor / 11-09-2021 11:04:35am
சினிமா டிக்கெட் முன்பதிவிற்கு. இனி ஒரே இணையதளம்

ஆந்திர மாநிலத்தில் அனைத்து தியேட்டர்களிலும் சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் பொதுவான இணையதளம் ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஏராளமான கிளைகள் உள்ளன. பெரிய அளவிலான தியேட்டர்களும் உள்ளது. சிறிய அளவிலான தியேட்டர்களும் உள்ளது. பெரிய நிறுவனங்கள் தனியாக இணையதளத்தை வைத்து டிக்கெட் விற்பனை செய்து வருகின்றன. சிறிய அளவிலான தியேட்டர்கள் ticketnew, bookmyshow, paytm உள்ளிட்ட சில தளங்களில் டிக்கெட் விற்பனை செய்து வருகின்றன. பொதுவாக தியேட்டரில் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கூகுளில் தேடினால் ஏராளமான இணையதளங்கள் வரும். இதனால் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு புதிய முயற்சியை செய்துள்ளார்.

அதாவது ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் ஒரே ஒரு இணையதளத்தை உருவாக்க முடிவு செய்து, இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காகவே உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யும் மாநில அரசின் இணையதளம் உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது சினிமா டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக எழுந்துவரும் குற்றச்சாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அரசின் டிக்கெட் முன்பதிவு இணையதளம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மக்கள் ஒரே மாதிரியான விலையில் திரைப்படங்களை பார்க்க முடியும். ஏனெனில் பல தியேட்டர்களில் ஏசி டிக்கெட்டுகள், ஏசி அல்லாத டிக்கெட்டுகள், மல்டிபிளக்ஸ் டிக்கெட்டுகள் என்று விலையை பிரித்து விற்பனை செய்து வருகின்றன. இவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Tags :

Share via