துர்கா ஸ்டாலின்கொ டைக்கானல் வருகை

by Editor / 18-09-2021 12:01:29pm
துர்கா ஸ்டாலின்கொ டைக்கானல் வருகை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள சாய் சுருதி ஆசிரமத்தில் நடந்த காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவரது நம்பிக்கை, இறை வழிபாடு விவகாரத்தில் ஸ்டாலின் ஒரு போதும் தலையிடுவது இல்லை. கடவுள் நம்பிக்கை விவகாரத்தில் துர்கா ஸ்டாலின் சுதந்திரமாக செயல்படுகிறார். தனக்கு பிடித்த கோயில்களுக்கு அடிக்கடி துர்கா ஸ்டாலின் செல்வார்.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலையில் சாய் சுருதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறதுஆசிரமத்தில் சத்தியசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது‌.
நேற்று முன்தினம் கலசங்களுக்கு சிறப்புப் பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.அத்துடன் காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டையும் நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடைக்கானல் வந்த துர்கா ஸ்டாலின்
கொடைக்கானலில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கினார். துர்கா ஸ்டாலின் வருகை மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.ஆசிரமத்தில் காயத்ரி தேவி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தின்போது கோபுரத்தின் மீது ஏறிக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை குறித்து முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்தது வந்துசென்ற பிறகே தகவல் தெரியவந்தது. தனது குடும்பத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த துர்கா ஸ்டாலின் அதன் பின்னர் தற்போது தான் சுவாமி தரிசனம் செய்ய வந்து சென்றுள்ளார்.

 

Tags :

Share via