மஹாளய பட்சம் காலத்தில் தர்ப்பணம்

by Editor / 20-09-2021 07:03:53pm
மஹாளய பட்சம் காலத்தில் தர்ப்பணம்

மகாளய பட்சம் என்பது புண்ணிய காலம். பட்சம் என்பது பதினைந்து நாட்கள். மகாளயபட்சம் என்பது நம் முன்னோருக்கான நாட்கள். இந்த பதினைந்துநாட்களும் முன்னோரை நினைத்து வழிபடவேண்டும். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களே மகாளயபட்சத்தில் அடங்கும். சாதாரண அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளய பட்ச காலத்தில் ஏதாவதொரு நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. மகாளய பட்ச காலத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்திற்கான நமது முன்னோர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம்.

மேலும் மகாளய பட்ச காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்காக நாம் திதி தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் கொடுப்பதால் தோஷங்கள் நீங்கி நமது தலைமுறையும் செழிக்கும் என்பது நம்பிக்கை. மகாளய பட்ச காலமான 14 நாட்களும் எந்தெந்த நாட்களில் யாருக்கு தர்ப்பணம் தரவேண்டும்

புரட்டாசி 08, செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை மகாபரணி, புரட்டாசி 12, செப்டம்பர் 28,செவ்வாய்கிழமை மகாவியாதிபாதம், புரட்டாசி 13,செப்டம்பர் 29 புதன் மத்யாஷ்டமி, புரட்டாசி 14,வியாழன்கிழமை அவிதவா நவமி இந்த நாட்களில் மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர பொதுவான நாளாகும். புரட்டாசி 17ஆம் தேதி அக்டோபர் 03,ஞாயிறுக்கிழமை, சந்நியஸ்தமாளயம் சந்நியாசிகளுக்கு திதி கொடுக்க ஏற்ற நாளாகும்.

இந்த 15 நாட்களும் நமது முன்னோர்களை நமது வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு விருப்பமானதை படைத்து வழிபட்டால் நமக்கு பித்ரு சாபம் ஏதும் இருந்தால் விலகும். நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், முழு பாதுகாப்பும் கிடைக்கும். நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

முதல்நாள் பிரதமை திதியில் தர்ப்பணம் - பணக்கஷ்டம் தீரும், பணம் வந்து சேரும்.

இரண்டாம் நாள் துவிதியை திதியில் தர்ப்பணம் - ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.

மூன்றாம் நாள் திரிதியை திதியில் தர்ப்பணம் - நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

நான்காம் நாள் சதுர்த்தி திதியில் தர்ப்பணம் - எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.

ஐந்தாம் நாள் அன்று பஞ்சமி திதியில் தர்ப்பணம் - வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

ஆறாம் நாள் அன்று சஷ்டி திதியில் தர்ப்பணம் - பேரும், புகழும் கிடைக்கும்.

ஏழாம் நாள் அன்று சப்தமி திதியில் தர்ப்பணம் - சிறந்த பதவிகளை அடையலாம்.

எட்டாம் நாள் அன்று அஷ்டமி திதியில் தர்ப்பணம் - அறிவாற்றல் பெருகும்.

ஒன்பதாம் நாள் அன்று நவமி திதியில் தர்ப்பணம் - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத் துணை அமைவார்கள்.

பத்தாம் நாள் அன்று தசமி திதியில் தர்ப்பணம் - நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பதினொன்றாம் நாள் அன்று ஏகாதசி திதியில் தர்ப்பணம் - படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.

பனிரெண்டாம் நாள் அன்று துவாதசி திதியில் தர்ப்பணம் - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

பதிமூன்றாம் நாள் அன்று திரயோதசி திதியில் தர்ப்பணம் - செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

பதினான்காம் நாள் அன்று சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் - பாவங்கள் நீங்கும். வருங்கால தலைமுறைக்கு நன்மைகள் உண்டாகும்.

பதினைந்தாம் நாள் அன்று மகாளய அமாவாசை தர்ப்பணம் - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.


புரட்டாசி 18, அக்டோபர் 4ஆம் தேதி திங்கட்கிழமை கஜச்சக்ஷமயாளயம், விதவைகள் அனுஷ்டிப்பதற்கு ஏற்றநாள். புரட்டாசி 19 அக்டோபர் 05, செவ்வாய்க்கிழமை சஸ்த்ரஹத மாளயம் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் தரலாம். புரட்டாசி 20, அக்டோபர் 06,புதன்கிழமை மகாளய அமாவாசை. மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தரலாம்.

 

Tags :

Share via