ஆயுள்  பெற , ஆரோக்கியம் பெற எளிய  பரிகாரம்

by Editor / 24-09-2021 05:47:21pm
ஆயுள்  பெற , ஆரோக்கியம் பெற எளிய  பரிகாரம்

 

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சம்பாதிக்கிற பணம் நமக்கும், நமது குடும்பத்திற்கும் உதவும்.
இல்லையெனில், சம்பாதித்த பணத்தை மருத்துவத்திற்காக செலவு செய்ய வேண்டி வரும். எனவே, ஆரோக்கியமாக இருந்தால் தான், நீண்ட நாள் அல்லது ஆயுளுடன் இருக்க முடியும். அவ்வாறு தீர்க்காயுளுடன் இருக்கும்போது, பல்வேறு நல்ல செயல்களை செய்ய முடியும். நமது அனுபவங்களை வருகின்ற இளம் தலைமுறையினர்களுக்கு தெரிவிக்க முடியும்.
அதேபோல், எந்த துறையாக இருந்தாலும் அதில் கிடைத்த அனுபவத்தை வாரிசு அல்லது உறவினர்களுக்கு பகிரும்போது இருபது அல்லது முப்பது ஆண்டில் கிடைக்கக்கூடிய தகவல்களை எளிதில் அவர்கள் தெரிந்துகொண்டு அதன் மூலமாக அதிக பயன்பெற முடியும்.


அதேபோல், ஒருவருக்கு அனைத்து செல்வங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க வேண்டுமானால் அவருக்கு முக்கியமாக தீர்க்காயுள் தேவைப்படுகிறது. அதையடுத்து, தீர்க்காயுள் பெறுவதற்குஅஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடாகும்.தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் சிறப்பு. அன்றைய தினம் பைரவரை வணங்கிட, கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும்.


வீட்டில் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு, மலர் அலங்காரம் செய்து வழிபாடும், ஹோமமும், நெல்லிக்காய் பொடி மற்றும் பலவகையான மூலிகை தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.நீண்ட ஆயுளுடன் நோயின்றி வாழ சனி பகவானை வணங்கலாம். சனி ஆயுள் காரகன். ஆயுள் பலம் குறைந்தவர்கள் சனி காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து வந்தால் ஆயுள் நீடிக்கும்

சனி காயத்ரி மந்திரம்:

''காகத் வ்ஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்''

சனி ஸ்துதி:

''நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம்

யமாக்ஞ்ஜம் சாய மார்த்தாண்ட

சம்பூதம் தம் நமாமி சனைஸ்வரம்'' என்ற மந்திரத்தை அனுதினமும் கூறி வந்தால் நன்மை கிடைக்கும்.

முன்னோர்களுக்கு பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது.

பிறருக்கு உதவி செய்வது. தர்ம காரியங்கள் செய்வது.

ஆண்டு தோறும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் ம்ருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்வதன் மூலம் பரிகாரம் பெறலாம்.

 

Tags :

Share via