சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 29-09-2021 09:56:43am
சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார். சேலம் தர்மபுரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். வரும் முன் காப்போம் திட்டத்தை சேலத்தில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அப்போது, கடந்த கால புயல் பாதிப்புகளின் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். மேலும், நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து சென்னையில் வடிகால் அமைப்புகளையும் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் இன்று சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் செல்ல உள்ளார். இன்று காலை சென்னையிலிருந்து விமானத்தின் மூலம் செல்லும் அவர் வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1,240 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 16 பிரிவுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாம்களில் நியமிக்கப்படுவார்கள் என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வாழப்பாடியில் இருந்து ஆத்தூர் செல்லும் முதல்வர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தையும் நவீன தனியார் ஜவ்வரிசி தற்போது ஆலையையும் தொடக்கி வைக்கிறார். இன்று மாலை விவசாய சங்கத்தினருடன் கலந்துரையாடுகிறார். மேலும், நாளை தர்மபுரிக்கு சென்று புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

 

Tags :

Share via