ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு அக்.1 முதல் புதிய கட்டணம்

by Editor / 29-09-2021 06:32:02pm
 ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு அக்.1 முதல் புதிய கட்டணம்


ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கு ரூ.300 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தங்கள் கணக்கு உள்ள அதேபோல் வங்கியின் கிளையில் டூப்ளிகேட் ரகசிய எண் (pin) பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்களில் மற்ற வங்கிகளில் 3 முறை இலவச பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் மெட்ரோ அல்லாத பிற நகரங்களில் 5 முறை இலவச பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.


அதற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதுபோன்று தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் 5 முறை இலவச பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேல் தங்கல் கணக்கு உள்ள வங்கிகளில் பணவர்த்தனை செய்தால் ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.


இதுபோன்று பணபரிவத்தனை இல்லா ஏடிஎம் பயன்பாடுகளுக்கு மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாக சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் போது ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், தங்கள் கணக்கு இருக்கும் வங்கிகளில் பணபரிவத்தனை இல்லா ஏடிஎம் பயன்பாடுகளுக்கு 5 முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டதுக்கு மேல் சேவையை பயன்படுத்தினால் ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வருடாந்திர ஏ.டி.எம் கார்டு பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி என்றும் குறுந்செய்தி அனுப்புவதற்கு ரூ.12 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via