மேற்கு வங்க முதல்வராக நீடிப்பாரா மம்தா பானர்ஜி? இன்று வாக்கு எண்ணிக்கை

by Editor / 03-10-2021 12:11:19pm
மேற்கு வங்க முதல்வராக நீடிப்பாரா மம்தா பானர்ஜி? இன்று வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிபோதும் அதன் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் அவர் முதல்வராக பதவியேற்ற நிலையில் 6 மாதத்திற்குள் பேரவை உறுப்பினராக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணமூல் உறுப்பினர் ராஜினாமா செய்த நிலையில் அந்த இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டார். இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கடந்த 30ஆம் தேதி நடந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவாகின..

இந்நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் மம்தா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என திரிணமூல் காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மம்தாவுக்கு தங்கள் கட்சி கடும் போட்டியை தந்துள்ளதாக எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரிவால் கூறியுள்ளார். பவானிபூர் தவிர மேற்கு வங்காளத்தில் மேலும் இரு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.

 

Tags :

Share via