தமிழ்நாட்டில் 10 ந்தேதி 30 ஆயிரம்  மையங்களில் 5-வது தடுப்பூசி முகாம்-அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Editor / 05-10-2021 04:54:02pm
தமிழ்நாட்டில் 10 ந்தேதி 30 ஆயிரம்  மையங்களில் 5-வது தடுப்பூசி முகாம்-அமைச்சர் மா. சுப்பிரமணியன்



தமிழ்நாட்டில் அக்டோபர் 10 ந்தேதி ஐந்தாவது தடுப்பூசி முகாம் 30 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


செப்டம்பர் 26-ஆம் தேதி மூன்றாவது தடுப்பூசி முகாமும் அக்டோபர் 3-ஆம் தேதி நான்காவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை அடுத்து அக்டோபர் 10 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பருவமழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் தலைகாட்ட தொடங்கியுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் வழக்கத்தை விட கூடுதலாக 10 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதாவது, ஒரே நாளில் 30 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மக்கள் தவறாமல் கலந்து கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

 

Tags :

Share via