கோயில் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட உள்ளது - அமைச்சர் சேகர்பாபு

by Editor / 07-10-2021 09:49:40am
 கோயில் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட உள்ளது - அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ரூ.3 கோடி அளவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. கோயில் நந்தவனத்தை மேம்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம், ரூ.50 லட்சம் மதிப்பில் மரத் தேர் உருவாக்க உள்ளோம். கோயில் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட உள்ளது.

கோயில்களுக்கு சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.முன்னதாக வடபழனி முருகன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அங்கு வந்த பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டு இருந்த, தனியார் ஒப்பந்ததாரரை கடுமையாக கண்டித்தார். அத்துடன் கட்டணம் வசூலிக்கக் கூடாது,

இனிமேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். கோயில்களில் வரும் பக்தர்களிடம் இதுபோன்று கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டணம் எச்சரித்த சேகர்பாபு வரும் நவம்பர் மாதத்திற்குள் வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via