உலகில் முதன்முறையாக மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகம்

by Editor / 20-10-2021 05:16:12pm
உலகில் முதன்முறையாக மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகம்



அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. மருத்துவர்கள் அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற பன்றியினுடைய சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனை மேற்கொண்டனர். அவருடைய ரத்தக் குழாய்களில் பன்றியின் சிறுநீரகம் இணைக்கப்பட்டு, உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது.


மூளைச் சாவு அடைந்த நபரின் நோய் எதிர்ப்பு மண்டலம் பன்றியின் சிறுநீரகத்தை உடனடியாக நிராகரிக்காமல் வெற்றிகரமாக இயகிகியுள்ளது. இந்த சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் 'மிகவும் சாதாரணமாகத் தோன்றியதாக ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.


இதற்கு முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாகக் குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.


இந்த சோதனை உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் புகழ்ந்துள்ளனர்.

 

Tags :

Share via