செளந்தர்யா ரஜினி உருவாக்கிய புதிய செயலி அறிமுகம்

by Editor / 25-10-2021 06:21:21pm
செளந்தர்யா ரஜினி உருவாக்கிய புதிய செயலி அறிமுகம்


ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய Hoote என்ற செயலியை ரஜினிகாந்த்  தனது டுவிட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் அந்த செயலியை தற்போது ஆயிரக்கணக்கானோர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.


இந்த செயலியை டவுன்லோடு செய்வது மிகவும் எளிதாக இருப்பதாகவும் மிக அருமையாக சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கி இருப்பதாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுவரை சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றால் அதை டைப் அடித்து வார்த்தைகளின் மூலம் தான் தெரிவிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த செயலியில் குரல்வழி மூலமே கருத்துக்களை தெரிவிக்கலாம் என்பதால் மிக எளிதாக தங்களது கருத்துக்களை பகிர முடியும் என்பதே இந்த செயலியின் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்த செயலி குறித்து சௌந்தர்யா கூறியது,
 என் அப்பாவுக்கு தமிழ் சரியாக எழுத வராது, முன்பு அவர் கட்சி தொடங்குவது குறித்த டுவிட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்பி வைப்பார். நான் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அதனை பதிவு செய்வேன். அப்போது பிறந்த யோசனைதான் இந்த செயலி.


மேலும் என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும். ஆனால் எழுத தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இந்த செயலியை உருவாக்கியுள்ளேன். அவருக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பு குறைய போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via