வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்

by Admin / 04-11-2021 01:18:04am
 வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்

 ஆர்யா - விஷாலுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள. மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு, தமன் இசை அமைக்க சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார். 

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு .. .பெரிய பட்ஜெட்டில்,, பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனிமி படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசித்துள்ளார்.  கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு மலைப்பாதை வழியாக நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

 தரிசனத்தின் போது  நடிகை ரோஜா விஷாலை சந்தித்து பேசினார்.  செய்தியாளர்களை சந்தித்த விஷால் ,, எனிமி திரைப்படம் திபாவளி தினத்தன்று வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது.. தமிழ், தெலுங்கு  மொழிகளி எனிமி வெளியாகிறது.

மே மாதமே சாமி தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தேன். கரோனா பரவல் காரணமாக முடியவில்லை.

இப்போது தரிசனம் செய்துள்ளேன் புனித்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியுள்ளேன். நல்ல மனிதர். இப்போது நம்மிடையே இல்லை. அவர் விட்டு சென்ற பணிகளை என்னால் முடிந்த வரை செய்வேன். அதன் தொடக்கம் தான் புனித் தொடங்கி வைத்த ஏழை எளிய குழந்தைகளின் கல்வி செலவை நான் இப்போது ஏற்றிருப்பது "என்றார்.

 

Tags :

Share via