மீனம்

by Admin / 17-11-2018
மீனம்

11.11.18 முதல் 17.11.18 வரை

மீனம்

காரியங்களில் இழுபறி காண்பீர்கள். தேவையற்ற பயம் உருவாகும். சந்தேகத்தால் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கவுரவச் செலவுகள் கூடும். வித்தியாசமான முயற்சிகளால் விரயம் ஏற்படும். உடன்பிறந்தோரோடு மனஸ்தாபம் உருவாகும். உறவினர்கள் உங்கள் பேச்சை தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் செல்வர். பிள்ளைகளின் பிடிவாதமான எண்ணங்களை மாற்ற முயற்சிப்பீர்கள். மருத்துவ செலவுகள் உண்டாகலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கலைத்துறையினர் தொழில்முறையில் அதிக அலைச்சலைக் காண நேரிடும். மாணவர்கள் கவனச்சிதறலால் தடுமாற்றம் காண்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரிடும். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள்.எதிர்நீச்சலில் முன்னேறும் வாரம் இது. வழிபாடு: சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.