சின்ன..சின்ன செய்திகள் சில வரிகளில்

by Editor / 21-11-2021 11:42:09am
சின்ன..சின்ன செய்திகள் சில வரிகளில்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் திருப்பணி பாலஸ்தாபனம் விழா.
மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் பாலஸ்தாபனம் இன்று நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கிவைத்தார். கட்டளை தம்பிரான் சுவாமி, உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்பு.


அரக்கோணம் அருகே ரயில் மோதியதில் சுகுமார், பாலா ஆகியோர் உயிரிழந்தனர். 
தக்கோலம் - திருமால்பூர் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தின் அருகே அமர்ந்து இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இடிக்கி அருகே திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரின் முகத்தில் ஆசிட் வீசிய 2 குழந்தைகளுக்கு தாயான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 
பேஸ்புக் மூலம் இருவரும் பழகிய நிலையில் தான் 2 குழந்தைகளுக்கு தாயாக இருப்பதால் இளைஞர் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகவும் அதனால் ஆசிட் வீசியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுக அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்க மாட்டோம் என்று அறிவித்தது குறித்து  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கரூர்,பல்லாவரம்,காஞ்சிபுரம், மறைமலை நகர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, எடப்பாடி, திருத்தங்கல்,காங்கேயம், உள்ளிட்ட  11 நகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை எண்ணூரில் பத்தாவது தடுப்பூசி முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி சங்கர்   மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்  சுதர்சனம் உடன் இருந்தனர்.


திண்டுக்கலில் கோவிட் - 19 மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மினி மாரத்தான்  போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒசூரை சேர்ந்த நஞ்சண்டான் முதலிடம்.  ராஜபாளையம் கல்லூரி மாணவர் மாரிசரத் 2ம் இடம், ஸ்ரீ வில்லிபுத்தூர்  குணாளன் 3ம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருப்பூர் செல்கிறார்;
முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
விழுப்புரம்: வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு.

திண்டுக்கலில் கோவிட் - 19 மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மினி மாரத்தான்.  2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்ப்பு .

சின்ன..சின்ன செய்திகள் சில வரிகளில்
 

Tags :

Share via