ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

by Admin / 10-12-2021 11:38:04pm
ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தில்லை நடராஜ பெருமான் வீற்றிருக்கும் தலமான சிதம்பரத்தில்,வருடம்தோறும் சிறப்பாக நடந்தேறும் முக்கிய இறை வழிபாட்டு நிகழ்வு   மார்கழி மாத ஆருத்ரா தரிசனமே.இன்று அந்நகழ்வு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.15ஆம் தேதி கோபுர தரிசன உற்சவமும்19ஆம்தேதி  தேரோட்டமும்20ஆம் தேதி முக்கிய நிகழ்வாக ஆருத்ரா தரிசனமும் நடக்க இருக்கிறது.

நடராஜர் கோவில்தேரோட்டம்,ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்து கோட்டாட்சியர் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர்,வட்டாட்சியர்,நகராட்சி ஆணையர் முன்னிலையில்,தீட்சிதர்கள்ஆலய பாதுகாப்ப சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கொரோனா தொற்று காலமானதால் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் அரசின் அடுத்த உத்தரவு வந்த பிறகே திரு விழா நடத்துவது குறித்து  முடிவு செய்து கொள்ளலாம்  என்று  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.   

 

Tags :

Share via