கர்நாடக சட்டமேலவைத் தேர்தல் முடிவு.

by Staff / 15-12-2021 12:30:56am
கர்நாடக சட்டமேலவைத் தேர்தல் முடிவு.

25 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தின் சட்டமேலவைத் தேர்தல் (எம்எல்சி) முடிவுகள் இன்று வெளியாகியது. தேர்தல் முடிவில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது. அதாவது வெறும் 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றிருந்ததால் ஆளுங்கட்சியான பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.முடிவில் 
எதிர்க்கட்சியான காங்கிரஸ் 11 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. பாஜக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி..எதிர்க்கட்சிகள் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

 

Tags :

Share via

More stories