சிலவரிகளில் சில செய்திகள்

by Editor / 19-12-2021 07:12:28pm
சிலவரிகளில் சில செய்திகள்

அம்மா வளாகம் என்றிருந்த ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தின் பெயரை பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என மாற்றியதற்கு அதிமுக கண்டனம்; இந்த பெயர் மாற்ற முடிவை உடனடியாக கைவிட முதலமைச்சருக்கு அதிமுக வலியுறுத்தல்.

அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜக உடன் அவர்கள் காட்டும் நெருக்கமே காரணம் - கே.எஸ்.அழகிரி

தொலைதூரம் செல்லக்கூடிய ட்ரோன் மூலம் நாகாலாந்தில் மருத்துவப் பொருட்கள் விநியோகம்

கொரோனாவுக்கு உலக அளவில் 53,65,984 பேர் பலி

கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க்! - அமைச்சர் செந்தில் பாலாஜி

வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 9 பேரிடம் விசாரணை.

குருவாயூர்: துர்கா ஸ்டாலின் எடைக்கு எடை சர்க்கரை... துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.


விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் 500 கிலோ எடையுள்ள பொருட்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாகச் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க அவரது உதவியாளர்கள், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக விருதுநகர் போலீசார் தகவல்.

மதுரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்வார்!” - அமைச்சர் மூர்த்தி தகவல்

 

Tags :

Share via