அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

by Editor / 05-01-2022 02:18:42pm
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

கர்நாடகாவின் ஹாசன் மாவட்ட பகுதியில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.வேலைவாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி வரை  பண மோசடியில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யை கைது செய்ய விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் 8 தனிப்படைகளைஅமைத்து தேடிவந்த நிலையில் நீண்ட கட்ட தேடுகளுக்குப்பின்னர் அவர் இன்று கர்நாடகாவின் ஹாசன் மாவட்ட பகுதியில் தலைமறைவாகஇருந்த பொது தனிப்படை  போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.இன்று மாலைக்குள் அவர் விருதுநகர் அழைத்துவரபடுவார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
 

Tags :

Share via