முதுநிலை மருத்துவ கலந்தாய்வு( PG NEET-BY  MCC)

by Admin / 09-01-2022 08:36:00pm
முதுநிலை மருத்துவ கலந்தாய்வு( PG NEET-BY  MCC)

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு( PG NEET-BY  MCC)

கடந்த ஆண்டு ஜீலையில்,மத்திய அரசு மருத்துவ படிப்பிற்கு அகில இந்திய இட ஒதுக்கீட்டில்,
இதர பிற்படுத்தப்பட்டோருககு27விழுக்காடும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு
10 விழுக்காடு இடஒதுக்க்கீடு வழங்கியது.இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்குத்
தொடுக்கப்பட்டது.இந்நிலை, மூன்று நாள்களுக்கு முன்னர் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்ச
நீதி மன்றம் இதர பிற்பட்டோருக்கு 27 விழுக்காடு செல்லும் என்று  தீர்ப்பு வழங்கியது.
2021-22 கல்வியாண்டுக்கான  முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியளித்தது.
தள்ளிபோன  முதுநிலை கலந்தாய்வு வரும் ஜனவரி 12.01.2022 புதன் கிழமை நடைபெறும்.இக்கலந்தாய்வில்
நாடு முழுவதும் 45,000   இளநிலை மருத்துவர்கள் பங்கேற்பார்கள்.   இச்செய்தி மத்திய சுகாதாரத்துறை
அமைச்சர் மன்சுக் மாண்டவியா தம் ட்வீட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு( PG NEET-BY  MCC)
 

Tags :

Share via