கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில சுற்றுச்சூழல்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

by Editor / 12-01-2022 12:22:13am
கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில சுற்றுச்சூழல்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில சுற்றுச்சூழல்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-2014 வரை சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கோவை ஈஷா யோகா மையத்துக்கு சுற்றுச்சூழல் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுற்றுச்சூழல் துறை நோட்டீஸ் மீது இடைகாலமாக நடவடிக்கை எடுக்க கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via