இஸ்ரோ புதிய தலைவராக சோம்நாத் நியமனம்,

by Editor / 12-01-2022 11:24:45pm
இஸ்ரோ புதிய தலைவராக சோம்நாத் நியமனம்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோம்நாத் நியமனம்,
அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராக இவர் நீடிப்பார்.தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் வரும் 14ம் தேதி நிறைவு பெறுவதைத்தொடர்ந்து 10வது தலைவராக பொறுப்பேற்கும் சோம்நாத் ராக்கெட் தொழிநுட்பத்தில் திறமையானவர்.சோம்நாத் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருப்பார்.இவர் கேரளாமாநிலம்திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக பதவியில் இருந்து வந்தவர் ஆவார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சோம்நாத் 1963-ல் பிறந்தார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், மேலும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். இந்திய விண்வெளி பொறியாளரும், ராக்கெட் விஞ்ஞானியுமான சோமநாத் ஏவுகணை வாகன வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணராக உள்ளார்.

 

Tags :

Share via