கவுகாத்தி-பிகானேர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து நிவாரணம் அறிவிப்பு

by Editor / 14-01-2022 12:02:12am
கவுகாத்தி-பிகானேர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து நிவாரணம் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தோமோஹானி அருகே கவுகாத்தி - பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டது,இந்த ரயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பயணிகள் இருந்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த மக்களை மொய்னாகுறி பகுதியிலுள்ள  உள்ள மருத்துவமனைக்கு பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து உதவிபெற ஹெல்ப்-லைன் நம்பரையும் (8134054999) ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடியுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து செய்தி வெளியானதும் கூட்டத்திலிருந்து வெளியேறி, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.கவுகாத்தி-பிகானேர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000-ம் வழங்கப்படுமென  இந்திய ரயில்வேவெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via