ஹீலர் பாஸ்கர் மீது திமுக சார்பில் புகார்

by Editor / 09-05-2021 05:57:10pm
 ஹீலர் பாஸ்கர் மீது திமுக சார்பில் புகார்



ஆக்சிஜனை அதிகரிப்பது குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை கோரி, கோவை சைபர் கிரைம் போலீசில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் ஆக்சிஜனை அதிகரிப்பது குறித்து ஹீலர் பாஸ்கர் யூ-டியூபில் காணொளி பதிவை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், ஹீலர் பாஸ்கர் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக கூறி, கோவை சைபர் க்ரைம் போலீசில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை மேற்கு மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளர் ரேணு கோபால் என்பவர் அளித்துள்ள அந்த மனுவில், கொரோனா தொற்று நோய் பாதிப்பின்போது ஆக்சிஜனை எவ்வாறு அதிகரிப்பது என்ற பெயரில் யூடியூப் வழியாக, அவர் பொதுமக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் ஹீலர் பாஸ்கர் மீது சைபர் குற்றத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via