ஜனவரி 25 *மொழிப்போர்_தியாகிகள்தினம்-தியாகிகள் விபரம்

by Editor / 26-01-2022 09:06:25pm
ஜனவரி 25 *மொழிப்போர்_தியாகிகள்தினம்-தியாகிகள் விபரம்


1938, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழி காக்கும் போரில் உயிர் நீத்த தியாகிகள் விபரம்:

1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

 2. தாளமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

 3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

 4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

 5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

 6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு: 16.7.1945,  இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

 7. கீரனூர் முத்து, பிறப்பு: 15.1.1943, இறப்பு: 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

 8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

 9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

 10. விராலிமலை சண்முகம், பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

 11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

 12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

.

 

Tags :

Share via