பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி!

by Editor / 24-11-2018
பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி!

பொதுத் துறை வங்கிகளான இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உள்ளிட்ட 19 வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தும் அமைப்பாக ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் கிளார்க், புரபெஷனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது.

இந்தத் தேர்வை அனுமதிக்கும் பொதுத்துறை வங்கிகளின் பணியிடங்களில் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம். தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு 8-வது சிறப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்கேல்-1 தரத்திலான 1,599 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம்: ஐ.டி. ஆபீசர் - 219, அக்ரிகல்சுரல் ஃபீல்டு ஆபீசர்- 853, ராஷ்டிரபாஷா அதிகாரி - 69, சட்ட அதிகாரி - 75, ஹெச்.ஆர்./பெர்சனல் அதிகாரி- 81, மார்க்கெட்டிங் அதிகாரி 302.கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய எஞ்சினியரிங் பிரிவு படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் ஐ.டி. அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Share via