விரைவு பேருந்து நிறுத்தங்களில் தரமான உணவுகள் வழங்கிட மோட்டல்கள் விபரம் அறிவிப்பு

by Editor / 07-02-2022 08:21:58am
விரைவு பேருந்து நிறுத்தங்களில் தரமான உணவுகள் வழங்கிட மோட்டல்கள் விபரம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.அப்படி இயக்கப்படும் பேரூந்துக்களில் செல்லும் வழியில் பயணிகள் சிற்றுண்டி மற்றும் உணவு உண்பதற்கு ஓட்டுநர்,நடத்துனர்கள் தரமில்லாத உணவகங்களில் வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளின் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத்தொடர்ந்து அதிமுக ஆட்சியின் போது ஏராளமான  விரைவு போக்குவரத்துக்கழக உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தபட்டுவந்தான்.ஆனால் நாளைடைவில் அவை போதிய பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட நிலையில்தான் சாலையோர மோட்டல்களில் பயணிகள் உணவருந்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.இந்த நிலையில் எந்தெந்த உணவகங்களில் நிறுத்த வேண்டும் என்ற பட்டியலை அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

 தரமற்ற சாலையோர உணவகங்களில் நிறுத்தி விடுவதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக  நிறுத்தும் இடங்களை ரத்து செய்தனர்.

 இந்நிலையில் தற்போது எந்தெந்த உணவகங்களில் உணவு இடைவேளைக்கு நிறுத்தலாம் என்பதை குறித்து பட்டியல் மாநில போக்குவரத்து துறை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இந்த தொலை தூர பேருந்துகள் நிறுத்துவதற்காக  18 உணவகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த18 உணவகங்களில் மட்டுமே பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என ஓட்டுனர், நடத்துனர்ருக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது.

 ஸ்ரீ பாலாஜி ஆர்யாஸ், பிரசன்ன பவன், வசந்த பவன் என்ற 3 நிறுவனங்களை சேர்த்த 18 உணவகங்கள் தற்போது போக்குவரத்துத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 சேலம், திண்டுக்கல்,காரைக்குடி செல்லக்கூடிய பேருந்துகள் வசந்த பவன் உணவகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னையிலிருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லக்கூடிய பேருந்துகள் பிரசன்ன பவன் உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த உணவகங்களை தவிர வேறு உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை உணவு சாப்பிடக் கட்டாயப்படுத்தினால் அந்த ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய பேருந்துகள் அனைத்தும் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கு நடுவில் இருக்கக்கூடிய ஸ்ரீ பாலாஜி ஆர்யாஸ் என்ற உணவகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். திருச்சி மற்றும்  சேலம் வழியாக மட்டுமே இந்த அரசு விரைவு பேருந்துகள் இயங்குகின்றன.

 இந்தப் பேருந்துகள் இனி 3 நிறுவனங்களில் சேர்ந்த 18 உணவகங்களில் மட்டுமே நிறுத்த முடியும். இந்த உணவகங்கள் அனைத்தும் விழுப்புரம்,உளுந்தூர்பேட்டை, திண்டிவனத்தை தாண்டி உள்ளது.

 இந்த உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த 18 உணவகங்களிலும் தொடர்ந்து உணவுப் பொருள் பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்துவார்கள், கட்டணம் தொடர்பாக போக்குவரத்துக்கு துறையினர் ஆய்வு நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகள் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் பயணிகளுக்கு நியாமான கட்டணங்களில் தரமான உணவை வழங்குவதை அதிகாரிகள் குழுவினர் இந்த மோட்டல்களில் உறுதி செய்யவேண்டுமென கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

விரைவு பேருந்து நிறுத்தங்களில் தரமான உணவுகள் வழங்கிட மோட்டல்கள் விபரம் அறிவிப்பு
 

Tags : தரமான உணவுகள் வழங்கிட மோட்டல்கள் விபரம்

Share via