வேகமெடுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் உங்க கவுன்சிலர் யார்..?

by Editor / 07-02-2022 08:28:27am
வேகமெடுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் உங்க கவுன்சிலர் யார்..?

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஜனவரி 28-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், 4-ம் தேதி மாலை 5 மணியுடன் தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.மேலும், மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஒரு சுலபமான திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  


https://tnsec.tn.nic.in/nomination_view_urban2021/

இணைப்பை கிளிக் செய்து அதில் உங்கள் மாவட்டத்தினை தேர்வு செய்து கொள்ளலாம். அதனுள், மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள், நகராட்சி வார்டு வேட்பாளர்கள், பேரூராட்சி வார்டு வேட்பாளர்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

 

Tags : local body elaction

Share via