தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

by Editor / 09-02-2022 10:32:59am
தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி  மாவட்டம்  கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த  வார்டுகளில் திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்  செய்திருந்தனர். இங்கு கடும் போட்டி நிலவிய நிலையில் கடந்த 5ம் தேதி நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஒரு வார்டை தவிர மற்ற 11 வார்டுகளிலும் அனைத்து  மனுக்களும் ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் 1, 2, 11 ஆகிய 3 வார்டுகளின்  திமுக வேட்பாளர்களுக்கு முன்மொழிந்தவர்களின் கையெழுத்து மாற்றம் உள்ளது  தொடர்பாக  சுயேச்சைகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி செயல் அலுவலர்  சுரேஷ்குமார், 3 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அதுகுறித்த  அறிவிப்பையும் வெளியிட்டார்.
இதற்கிடையே வேட்புமனு வாபஸ்க்கு  கடைசி நாளில்  ஒருவர் மட்டும் வாபஸ் பெற்ற நிலையில்,  சர்ச்சைக்குள்ளான 3 வார்டுகளுக்கு மட்டும் தேர்தலைநிறுத்திவைத்து  மற்ற 9  வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த இருப்பதாக தகவல்வெளியானதால்  சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன்  பேரூராட்சிஅலுவலகத்தை  முற்றுகையிட்டதாள் அங்கு பரப்பரப்பு உருவானது.இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார்   பேச்சுவார்த்தைநடத்தியதால் அனைவரும்  கலைந்து சென்றனர். இதன் காரணமாக கடம்பூர்  பேரூராட்சியில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை  ரத்து செய்வதாக மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 

Tags : அதிகாரிகள் மீது நடவடிக்கை

Share via