சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு :  துணை சபாநாயகராகிறார் கு.பிச்சாண்டி

by Editor / 11-05-2021 04:21:50pm
 சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு :  துணை சபாநாயகராகிறார் கு.பிச்சாண்டி

 


தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், கலைவாணர் அரங்கில் 11ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி செயல்படுவார் என சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். மேலும், 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இதையொட்டி, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான வேட்புமனு தாக்கல்  தொடங்கியது. சபாநாயகருக்கு அப்பாவுவும், துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், நேற்று  பகல் 12 மணியுடன் வேட்புமனுவுக்கான கால அவகாசம் நிறைவடைந்தது. யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதததல், சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் தேர்வானார். இருவரும் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

 

Tags :

Share via