ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு

by Admin / 04-03-2022 02:38:48pm
ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம் மைசூப்பா உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
 
கடந்த 2 வருடமாக ‘ஆவின்’ பொருட்கள் விலை உயராமல் இருந்து வந்தது இந்த நிலையில் பால் தவிர்த்து மற்ற ஒவ்வொரு பொருட்களின் விலையும் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி தயிர் ½ லிட்டர் ரூ.27ல் இருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிர் பாக்கெட் (சாதா)ரூ.14-ல் இருந்து ரூ.15 ஆகவும், ஸ்பெ‌ஷல் தயிர் 200 கிராம் பாக்கெட் ரூ.22-ல் இருந்து ரூ.25 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

நெய் 1 லிட்டர் ரூ.515-ல் இருந்து ரூ.535, ½ லிட்டர் நெய் ரூ.265-ல் இருந்து ரூ.275 ஆகவும் 200 மில்லி நெய் ரூ.115-ல் இருந்து ரூ.120 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 100 மில்லி நெய் விலை ரூ. 65-க்கு அதே விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

நெய் 5 லிட்டர் ரூ.2550-ல் இருந்து ரூ.2650-க்கு விலை உயர்ந்துள்து. நெய் 15 கிலோ டின் ரூ.8350-ல் இருந்து ரூ.8680ஆக விலை உயர்ந்து விட்டது.

பிரீமியம் நெய் 1 லிட்டர் டின் ரூ.555-ல் இருந்து ரூ.585, பரீமியம் நெய் ½ லிட்டர் ரூ. 305-ல் இருந்து ரூ.320ஆக விலை உயர்ந்துள்ளது.

பால் பவுடர் 1 கிலோ ரூ.320 இருந்து ரு.360 ஆக உயர்ந்து உள்ளது. பாதாம் பால் பவுடர் 200 கிராம் ரூ.80-ல் இருந்து ரூ100 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

குல்பி ஐஸ் 25 ரூபாயில் இருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

கோன் ஐஸ் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் அறிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

 

Tags :

Share via