திருச்சி மாநகராட்சி மேயர் பதவியேற்ப்பில் அமைச்சர் கே.என்.நேரு கலக்கல்

by Editor / 04-03-2022 10:35:11pm
திருச்சி மாநகராட்சி மேயர் பதவியேற்ப்பில் அமைச்சர் கே.என்.நேரு கலக்கல்

திருச்சி மாநகராட்சியில்  மொத்தம் உள்ள 65-வார்டுகளில் திமுக கூட்டணி 59 இடங்களை கைப்பற்றியது.

இதன் காரணமாக திமுக மேயர் வேட்பாளர் அன்பழகன் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் அவருக்கு மேயர் வெற்றி பெற்ற  சான்றிதழை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி அவரை மேயர் இருக்கையில் அமர வைத்தார்.

அப்போது  "இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என சொல்ல பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,திமுக கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உட்பட அனைவரும் சிரித்தனர்.

 

Tags : Minister KN Nehru mixed over the appointment of Trichy Corporation Mayor

Share via