மதுரையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞர்

by Admin / 11-07-2019
மதுரையில்  கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞர்

மதுரை மேல அனுப்பனடி பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார், இவர் மீது மதுரை நகரில் பல்வேறு காவல் நிலைத்தில் 5 க்கு மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.ஒரு குற்ற வழக்கு விசாரனைக் காக காவல்துறை தனிப் படையினர் அவரை விசாரணை செய்தபோது அவரிடம் ஒரு கள்ளத்துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவர் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் 16 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்துள்ளது,அதனை தொடர்ந்து துப்பாக்கி மற்றும் தோட்டக்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரனை செய்தனர்.விசாரனையில் கல்யாண சுந்தரத்திடம் கைற்றப்பட்ட துப்பாக்கி உத்திர பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்டது என்றும் மாவட்டத்தில் சில வழிப்பறி களில் ஈடுப்பட்டதும் தெரிய வந்துள்ளது.காவல் துறையினர் தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.

Share via