கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு

by Admin / 08-03-2022 11:55:33pm
கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு


சேலம் ஒமலூரைசேர்ந்த கோகுல்ராஜ் பொறியியல் கல்லூரி மாணவர் .கடந்த 2015 ஆம் ஆண்டு        காதலித்த பெண்ணை த்திருமணம் செய்ததால் ஆணவபடுகொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.காவல்துறை விசாரணையில் சஙககிரி தீரன் சின்னமலை கவுண்டர்பேரவை தலைவர் யுவராஜ் உள்பட இருபதிற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்புச்சிறப்பு நீதிமன்றத்தில்   நடந்து வந்தது. இந்நலையில் யுவராஜ்,சிவகுமார்,அருண்,சதீஸ் குமார்,ரகு.ரஞ்சித்,செல்வராஜ்,சந்திரசேகர்,பிரபு,கிரிதர் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என்றுஅறிவிக்கப்பட்டது.நீதிபதி சம்பத்குமார் தண்டனை விபரங்களை அறிவித்தார்.கொலை,
வன்கொடுமை,கூட்டுச்சாதி,ஆட்கடத்தல்,தஞ்சமடைய உதவுதல் என பல பிரிவுகளில் பத்து குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுல் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.யுவராஜீக்கு மூன்று ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம்
அபராதம் சாகும் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.அருண் ,குமார்,சதிஸ்குமார்,ரகு,ரஞ்சித் செல்வராஜ்க்குஇரடடை ஆயுல்தண்டனையும் சாகும் வரை சிறைத்தண்டனையும்சந்திரசேகருக்கு ஒருஆயுள்  தண்டனை சாகும் வரை சிறைத்தண்டனையும் பிரபு,கரிதர் ஆயுள்தண்டணை சாகும்வரை சிறைத்தண்டனை   மற்றும் கூடுதல் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஐந்தாயிரம் அபராதம் விதித்து தீர்பளித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு
 

Tags :

Share via