நாடு முழுவதும் களைக்கட்டியது ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்

by Editor / 17-03-2022 08:35:55am
நாடு முழுவதும் களைக்கட்டியது ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்


ஹோலிகா என்ற அரக்கி பிரகலாதனை அழிக்க முயன்றபோது கண்ணபிரானால் அரக்கி ஹோகா தீயில் தகனம் செய்யப்பட்டு பிரகலாதன்  நெருப்பிலிருந்து உயிர்ப்பெற்றுஎழுந்ததாக புராணகதைகள்  கூறுகிறது இதனால் பல இடங்களில் ஹோலிகா தகனம் செய்ய மரக்கட்டைகளை அடுக்கி தீ மூட்டி வருகின்றனர்ட். பல ஊர்களில் ஹோலிப் பண்டிகை கால சிறப்பு இனிப்புக்களையும் பொதுமக்கள்  பகிர்ந்து கொண்டனர்.

வடமாநிலங்களில் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களில் தொடங்கிவிட்டன. நாளை ஹோலியை பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் சூடு பிடிக்கத்தொடங்கிவிட்டன.இதனை முன்னிட்டு ஹோலியை பண்டிகைக்கு தேவியான பொருட்களின் விற்பனை வடமாநிலங்களில் களைகட்டத் தொடங்கியுள்ளது.

ஆண்டுக்குஒருமுறை வரும் வடமாநில  வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும்  இந்தியா,நேபாளம், வங்காளதேசம், உள்ளிட்ட நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியுள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் தொட்டிகளில் பலவகையிலும் ஒருவர் மீது ஒருவர் வர்ணம் பூசி மகிழ்கின்றனர் வார சந்தையில் பொருட்களை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன மக்கள் திரண்டு வந்து பொருட்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

நாடு முழுவதும் களைக்கட்டியது ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்
 

Tags : Weeding across the country is the celebration of Holi

Share via