ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் பிரிவில் தேர்வான முதல் இந்திய வீராங்கனை

by Editor / 02-07-2021 07:27:17pm
ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் பிரிவில் தேர்வான முதல் இந்திய வீராங்கனை

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நீச்சல் வீராங்கனை மானா படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கில் 2021-க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் மூன்றாவது நீச்சல் வீரர் என்ற பெருமையை மானா படேல் பெற்றுள்ளார்.

மானா படேல், அகமதாபாத்தைச் சேர்ந்த பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர். 21 வயதான மானா படேல் 50 மற்றும்  200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கம் வென்றுள்ளார்.

2018ம் ஆண்டு, 72 வது மூத்த தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் படேல் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். அதே ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடந்த சீனியர் தேசிய போட்டிகளில் படேல் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும்  பதக்கங்களை வென்றார்.

இந்நிலையில், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மானா படேல் தேர்வாகி இருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் சஜன் பிரகாஷ் ஆகிய நீச்சல் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்று உள்ளனர். இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில், நீச்சல் பிரிவில் இந்தியாவில் இருந்து பங்கு பெறும் முதல் வீராங்கனை எனும் சாதனையை படைத்திருக்கிறார்.

இதையடுத்து மானா படேலுக்கு, மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர் மானா படேல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் 3 வது இந்திய நீச்சல் வீரராகிறார். அவர் Universality Quota மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via