ரஷ்யாவுடனான போரில்உக்ரேன் தனியாக விடப்படவில்லை துணை நிற்பதாக போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

by Staff / 25-03-2022 11:43:15am
ரஷ்யாவுடனான போரில்உக்ரேன்  தனியாக விடப்படவில்லை துணை நிற்பதாக போரிஸ் ஜான்சன்  அறிவிப்பு

ரஷ்யாவுடனான போரில் உக்ரேன்  தனியாக விடப்படவில்லை என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜி 7 மாநாட்டில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார்.

நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசேசில்  ஜி-7 நாடுகளின் மாநாடு நடைபெற்றது இதில் பங்கேற்று பேசிய போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு உதவ இதர நாடுகளுடன் இணைந்து செயல்திட்டம் வகுக்கப்படும் என்று கூறினார்.

ரஷ்யாவை சேர்ந்த 1000 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிக கடுமையான பொருளாதாரத் தடைகளையும் பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via