முதல்வரின் ஹெலிகாப்டரில் தீ விபத்து

by Staff / 13-04-2023 03:53:28pm
முதல்வரின் ஹெலிகாப்டரில் தீ விபத்து

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சென்ற ஹெலிகாப்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். இந்நிலையில், ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் இறக்கையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த விபத்து நடப்பதற்கு முன் முதல்வர் பசவராஜ் பொம்மை தனது மனைவியுடன் கொல்லூர் கோவிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via