பிளஸ் 2-ல் கணிதம், வேதியியல் பாடங்கள் படிப்பது கட்டாயம் அல்ல

by Staff / 30-03-2022 01:10:41pm
 பிளஸ் 2-ல் கணிதம், வேதியியல் பாடங்கள் படிப்பது கட்டாயம் அல்ல

என்ஜினீயரிங் தொழிற்கல்வி படிப்பிற்கு பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் அடிப்படையாக உள்ளன. இந்த பாடங்களை கொண்ட பிரிவில் படித்தால் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர முடியும். ஆனால் இதனை மாற்றி கணிதம் பாடம் இல்லாமல் என்ஜினீயரிங் படிப்பில் சேர முடியும் என்று புதிய கல்வி கொள்கை வழிவகுத்துள்ளது.

கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 14 பாடங்கள் பிளஸ் 2 வில் இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முயற்சி செய்தது. 3 பாடங்களை மட்டுமே வைப்பதற்கு தீவிரம் காட்டியுள்ளது.

இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஒவ்வொரு பாடங்களிலும் என்ன இருக்க வேண்டும் என்பதை புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கான கையேட்டை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. 29 இளநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்புகளுக்கும் தனித்தனியாக விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 10 படிப்புகளுக்கு கணிதம் கட்டாயம் தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் பாடங்கள் படிக்க அவசியம் இல்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூறியுள்ளது. அதன்படி கலை அறிவியல், ஒக்கே‌ஷனல், அறிவியல் பாடப்பிரிவுகள் இருக்காது. 4 வருட பொறியியல் படிப்புகள் படிப்பதற்கு கணிதம் பாடம் மட்டும் அவசியம் இல்லை. மற்ற பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய திட்டங்களை கடந்த ஆண்டு கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வில்லை. இந்த வருடம் செயல்படுத்த தொழில்நுட்ப கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 வருட பொறியியல் படிப்பை இடையில் விட்டு சென்றால் சான்றிதழ் பெற முடியாது. ஆனால் புதிய கல்வி கொள்கை மூலம் எந்த வருடமும் படிப்பில் இருந்து மாணவர் வெளியேறலாம், உள்ளே வருவதற்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது.

முதல் ஆண்டு படித்து விட்டு வெளியே சென்றால் அதற்கு சான்றிதழ் வழங்கப்படும். 2-வது ஆண்டில் வெளியே சென்றால் டிப்ளமோ சான்றிதழ் கிடைக்கும். 3-வது ஆண்டில் வெளியேறினாலும் அதற்கு தனி சான்றிதழ்களும், 4-வது ஆண்டு முழுமையாக படித்து முடித்தால் பொறியியல் சான்றிதழ் வழங்குவதற்கு வழி வகைசெய்யப்பட்டுள்ளது.

இந்திய புதிய கல்வி கொள்கையை கல்வியாளர்கள் எதிர்க்கிறார்கள். பொறியியல் படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியல் பாடங்கள் படிப்பது அடிப்படையாகும். அப்போது தான் பி.இ., பயோடெக்னாலஜி படிப்புகளுக்கு செல்லும் போது உதவியாக இருக்கும்.

ஆனால் புதிய கல்வி கொள்கையில் அது தேவையில்லை. அதற்கு பதிலாக இணை பயிற்சி படிப்புகள் படித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via