தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் கனிமவள வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தம்.

by Editor / 14-01-2024 09:25:54am
 தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் கனிமவள வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தம்.

தமிழக தேர்வை இல்லையான தென்காசி மாவட்டம் புலியறை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு சுமார் 700 க்கும் மேற்பட்ட வாகனங்கள் 24 மணி நேரமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தென்காசி மாவட்டங்களிலிருந்தும் புலியரை வழியாக கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றன பத்து சக்கரங்கள் முதல் 22 சக்கரங்கள் வரை உள்ள கனரக வாகனங்கள் இந்த வழியே செல்வதின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் இந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது மேலும் சபரிமலை சீசன் காலம் என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் ஐயப்ப பக்தர்களும் பொதுமக்களும் சிக்கிக் கொள்கின்றனர் இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஜோதி தரிசனம் 15ஆம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதால் தென்காசி மாவட்டம் புளியரை  வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருவதால் இந்த வழி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் 13ஆம் தேதி இரவு 9 மணி முதல் நிறுத்துவதற்கு தென்காசி மாவட்ட துறை உத்தரவிட்டுள்ளது.
 அதன் தொடர்ச்சியாக ஏராளமான கனிம வளங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் செங்கோட்டை கட்டளை குடியிருப்பு சாலையில் உள்ள தனியார் எடைநிலையத்தில் உள்ள காலியிடங்களில் ஏராளமாக நிறுத்த தொடங்கியுள்ளனர். மேலும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான வாகனங்களும் தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.முன்னறிவிப்பின்றி லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தாலும் மக்கள் வரவேற்றுள்ளனர்.
 

 

Tags :  தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் கனிமவள வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தம்.

Share via