ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம்

by Admin / 01-03-2019
ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம்

கள்ளக்காதலி சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்காரன் பட் டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி விஜயலட்சுமி (35). இவரது கணவர் காலமாகிவிட்டார். இதேபோல் திருச்சி மாவட்டம் இனாம் புலி பகுதியைச் சேர்ந்தவர் சின்னவலியான் என்கிற ஐயர் (43). இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து நீண்ட காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே ஐயரிடம் இருந்து விலகி தனது சொந்த ஊரில் வசித்து வந்தார் விஜயலட்சுமி. கடந்த 2017 அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காவல்காரன் பட் டிக்கு வந்து தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தி உள்ளார் ஐயர். இதனை மறுத்த விஜயலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்தார் ஐயர். இச்சம்பவம் குறித்து தோகமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா குற்றவாளி அய்யருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி ஐயரை திருச்சி மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

Share via