நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது” என யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை

by Editor / 16-09-2022 12:06:33am
நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது” என யூடியூப் சேனலில்  பேட்டி கொடுத்த சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை

சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், "உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.

இது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் செப்டம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
8 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் குறித்து அவதூறு கருத்துக்களை பேட்டி  அளித்தது தொடர்பாக நீதிபதிகளின் கேள்விக்கு  பதிலளித்த சவுக்கு சங்கர் தனக்கு இது குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதனை ஏற்று வழக்கின் விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், யூட்யூபர் சவுக்கு சங்கர் மீதான இந்த குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் நீதிமன்றம் குறித்து பேசிய பதிவுகளை நீக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் டிவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனங்கள், அக்டோபர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் சிறைக்கு அழைத்து செல்லபட்டார். 

நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது” என யூடியூப் சேனலில்  பேட்டி கொடுத்த சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை
 

Tags :

Share via