58 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி வ உசி துறைமுகம் வந்தடைந்தது.‌

by Editor / 09-04-2022 03:49:14pm
58 ஆயிரம் டன் நிலக்கரி  தூத்துக்குடி வ உசி துறைமுகம் வந்தடைந்தது.‌

தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் மூலம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.கடந்த வாரம் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரே நாளில் 5 அலகுகளும் நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

அதனையடுத்து கப்பல்கள் மூலம் உடனடியாக நிலக்கரி கொண்டு வரப்பட்டு ஐந்து அலகுகளும் படிப்படியாக ஓடத் தொடங்கின.இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒன்றாவது அலகை தவிர மற்ற நான்கு அலகுகளும் திடீரென்று நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி கூடுதல் நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்ட நிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து  58 ஆயிரம் டன் நிலக்கரி பிரத்தியேக கப்பல் மூலம் தூத்துக்குடி வ உசி துறைமுகத்திற்கு இன்று  வந்தடைந்தது.‌ 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு17ஆயிரம் முதல் 18 ஆயிரம் டன் நிலக்கரி தேவை  குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via